Thursday, August 9, 2012

...மழை ஆசை ...

கொட்டும் மழையில் 
ஒற்றை குடையில் 
கை கோர்த்து நடக்க ஆசை !

மழை நின்ற பின்னும் 
மரக்கிளை ஆட்டி, நீ தரும் -
அரை நிமிட மழை ஆசை !

உள்ளங்கை விரைத்ததும்
சேர்த்து அணைத்து 
உன் சட்டை தரும் இதம் ஆசை !

பால்கனி சாரலில் 
பாதி பாதி பருகும் 
தேனீர் ஆசை !

ஜன்னல் வழி மழை ஏந்தி 
கன்னத்தில் சிதறவிட்டு 
சிரிக்கும் உன் முகம் ஆசை !

நீ அருகே இல்லாத போது பெய்யும்  
குளிர்மழை , மனதுள் தரும் 
வெப்பம் ஆசை !

உன்னோடு மீண்டும் சேர்ந்து 
மழை ரசிக்கும் 
கனவுகள் ஆசை !

கனவுகள், 
கலையும் முன்னமே 
என் முன் நீ வந்திட ஆசை !

இன்னும் நிறைய குட்டி குட்டி ஆசைகள் 
அதை நிறைவேற்றி தர 
மழை மீது ஆசை !

மழையில் சந்தோசங்கள் சேர்க்கும்
உன்மேல் 
ரொம்பவும் ஆசை !!!

Thursday, September 22, 2011

...பொம்மை...


நான் உண்ணும் பண்டங்களை 
உனக்கும் தருகிறேன் -  
"வேண்டாம் நீ சாப்பிடு" என சிரிக்கிறாய் !
கல்லூரி சென்று திரும்பும்போது 
"தனியே விட்டு எங்கு சென்றாய்" என 
ஏங்கித்தவித்து இருக்கும் உன் முகம் பார்கையில் 
உனை கட்டித்தழுவாமல் அமைதிகொள்வதில்லை ...
உனக்கும் தட்டிக்  கொடுக்கிறேன் 
ஆனால் உறங்காது என்னை ரசிக்கிறாய்... 
என் சந்தோசங்களையும் துக்கங்களையும் 
உன்னிடமே பகிர்ந்துகொள்கிறேன்
தட்டிக்கொடுக்கவும் கண்ணீர் துடைக்கவும் 
சின்ன கைகளாயிற்றே உனக்கு - அதனால் தான் 
மௌனமாய் கேட்கிறாயோ ?
"என்னை என நினைத்துக்கொள் "
என என்னவன் வாங்கித் தந்த "பொம்மை" நீ....
இருந்தும் உனை முத்தமிடும் போது   
லேசாய் பொறாமை கொள்கிறான் ...
பொம்மையாய் பிறர் நினைத்தாலும் 
நான் சொல்லும் கதை கேட்டு 
நீ தலை ஆட்டுவது 
எனக்கு மட்டும் தானே தெரியும்...
என்னவனை நேசிக்கிறேன் ....
பனி நிமித்தம் வேறு இடம் சென்று  
அவன் தந்த தனிமையை மறக்க செய்யும் 
நல்ல நண்பன் நீ ....
அதனால் உன்னையும் நேசிக்கிறேன்.... 
I love you so much creamy......


Friday, July 15, 2011

...எப்போது வருவாய் ?...

உன்னுடன் பயணிப்பதுபோல் ஒரு உணர்வு 
அருகே நீ இருக்கிறாய் என்ற ஆச்சர்யத்தில் 
சற்றென்று விழித்துக்கொண்டது மனம் ...
கனவு என தெரிந்ததும் 
சின்னதாய் ஒரு ஏமாற்றம் ,
புகைப்படங்களில் உன் முகம் தேடி 
ஒரு முறை தொட்டு பார்த்துவிட்டு,
லேசான சிரிப்புடன் 
கட்டி இருந்த தலையணையை 
இன்னும் இருக்கிகொண்டேன்......

மேலும் உறக்கம் கொள்ளமுடியாமல், 
உன்னுடனான ஏதேதோ நினைவுகள் 
மங்கலாய் தோன்றி மறைகின்றன ...
அறைக்கதவை திறந்து பார்கையில், 
மேக மூட்டங்கள் நிறைந்த வானம் 
சில்லென்ற சாரல் காற்று , 
வெள்ளை வெளிச்சத்தில் 
மைனாக்களின் காதல் உணர்த்தியது
நம் தனிமையை.... 

அரைமனதுடன் வேலைகளை முடித்து 
இருவரும் சென்றுவந்த 
கோயிலுக்குச் சென்றேன்.... 
ஜன்னல் வலி மரங்களை 
வெறித்துபார்த்த  படி, 
வழியெங்கிலும் உன் ஞாபகங்கள் .....

சாலையோர மைல் கற்களை பார்த்ததும் 
ஒரு மின்னல் பாய்கிறது மனதுக்குள் ....
அதில் அச்சடிக்கப்பட்ட தூரம் 
உனக்கும் எனக்குமான இடைவெளியின் நீளம் ....

 நாம் அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்தேன்...
அங்குள்ள தூண்கள், அன்று நாம் பேசியதை 
பதிவு செய்து வைத்திருந்தது போலும் 
இன்று எனக்கு மட்டும் ஒளிபரப்பிக் காட்டியது ....

ஒரு நாள் காணாத காதலனுக்காக 
புலம்புகிறாள் உடன்வந்திருந்த  தோழி.... 
நெடுநாள் காணாத உன்னை 
அலைபேசியில் கேட்கிறேன் ,        
"எப்போது வருவாய் ?"
என்றும் சொல்வது போல் சொல்லிவிட்டாய் 
"கண்டிப்பா வரேன் குட்டிமா...." என 
கேள்விக்கான பதிலை மட்டும் .... 

நிகழ்வுகளால் நிரப்பமுடியாத 
டைரி பக்கங்களை 
இன்றும் நினைவுகளால் மட்டுமே 
நிரப்பும்போது 
மெதுவாய் எட்டிப்பார்கிறது 
தனிமையின் கொடுமையும் 
இன்றைய கனவுகளுக்கான எதிர்பார்புகளும்......


...Puppykutty :)

Saturday, May 14, 2011

...பிரிவு...

சமாதானதிர்க்காகவே சண்டைகள் தொடங்குகிறேன்
காதல் வெளிபாடுகளுக்காகவே சீண்டிப்பார்கிறேன் 
கொஞ்சலும் கெஞ்சலும் என
செல்ல கோபமாய் 
முடிந்திருக்கும் இம்முறையும்...

விளையாட்டாய் ஏதோ பேச 
பதிலுக்கு நீயும் கோபத்தில் சீறினாய்... 
வார்த்தைகளை நங்கூரமாய் இறக்கி விட்டு
நீ தான் முதலில் ஆரம்பித்தாய் என்கிறாய்...

கனவுகள் பல கொண்டு
இதய துடிப்பிலே புதுராகம் மீட்டி
உன் எதிர்பார்புகளை
ஏமாற்ற மாட்டேன் என்ற நம்பிக்கையில்
அன்று காதலை சொன்னவன்,
என் நம்பிக்கைகளை தகர்தவனாய்
"என்னை விட்டு போ " என்று
என் துடிப்பை துண்டிக்கிறாய் இன்று....

உதடுகள் பிரிவு மொழி கதைத்தாலும் ,
"போய்விடாதே" என்று உன் மனமும்
"போகவேண்டாம் என சொல் " என
என் மனமும்
மௌனமாய் கதறுகின்றன...

நீ திருடிய என் இதயத்தை
தர மறுத்தவனாய் - உன்னுடையதை
மட்டும் பிடுங்கி கொண்டு,
மீண்டும் என்னிடம் அதை தரவே
ஏங்கி நிற்கிறாய்....
உனை சேரவே நானும் தவிக்கிறேன்...

காதலால் இணைந்தவர்களை ,
இன்றும் இணைத்தே வைத்திருகிறது
இந்த பிரிவும்...