Wednesday, November 10, 2010

...தீபாவளி கவிதை...

வீதியில் வெடிகள் பொருத்தி வைப்பாய்
வெடிக்கும்முன் எனை நோக்கி வருவாய் ,
பாதி மூடிய  விழிகளுடன் நான்
என் செவி அருகே உன் கரங்கள்
அழுத்தமாய் அணைத்து பயம்போக்குவாயே நீ !
காதலோடு நம் விழி சிவக்கும்.
வெடியின்  சத்தம் கேட்காது போகும் -
நம் இதயங்களின் துடிப்பு சத்தத்தில்.
காற்றை வென்று அசைந்தாடும் தீபங்களும்,
கர்வம் தவிர்த்து அமைதியாய் ஒளிரும் ,
நாம் ஏற்றிய காதல் தீபம்
அவற்றை விட பிரகாசம் கொண்டதால் !!!

காதலுடன்,
...suganya...

Saturday, October 30, 2010

...உனக்கான பிரார்த்தனை...

என் காட்சிகளில் இருந்து
மறைந்தே சென்றுவிட்டாய் ,
உன் நினைவுகளை
என்னுள் கலந்துவிட்டாய் .
மனதின் ஆழத்தை தொட்டவன்
ஏனோ காயபடுத்தி விலகினாய் .
உனை மறக்க துடிக்கிறேன்
நாளொன்றிலும் எழும் நினைவுகளில்
உன் முகம் அகற்றுகிறேன் .
இருந்தும் என்னுள்
உதிக்கிறது உன் பெயர்
பிரார்த்தனைக்காக விழிமூடும்
அந்த ஒரு நிமிடத்தில்....!

பிரார்த்தனைகளுடன்,
          ...சுஜி...

Friday, October 8, 2010

...காதலால் தவிக்கிறேன்...

என் விடியல்களோ உன்
விழிகளில் - அதனை
காணாதிருந்தும் விடிகிறது என்
பொழுதுகள் - நின்
அழைப்புமணி சப்தம் கேட்டு!

மௌனமொழி கொண்டு
உள்ளம் களவாடும் உணர்வுகளும்
வார்த்தைமொழி பேசுகின்றன ,
கைபேசியில் மௌனம்
விசித்திரம் என்பதால் !

உன்னோடு தோள் சாய்ந்து
தலைகோதும் உன் விரல்களுக்காய்
சுவரோடு தலை சாய்த்து
தென்றல் என்குழல் வருட
கனா காண்கிறேன் !

கோபத்தில் என்விழி சிவக்க
காதல்திமிர் கண்களில் சிந்தி
இதழ்களில் குறும்பாய் சிரிக்கும் - உன்
முகம் காணாத ஏக்கத்தில்
துண்டிக்கிறேன் தொழில்நுட்ப இணைப்பை !

கடலளவு காதல் கொண்டு
சிறுதுளியினை  ரசிக்கிறோம் .
காதலால் தவிக்கிறேன் ,
கரை தாண்டும்முன் வந்துவிடு!
பேசிய இதழ்கள் மூடிக்கொள்ளும்
ஏங்கிய விழிகள் காதல்பேசும்- அந்நாளுக்காய்
காத்திருக்கிறேன் காதலுடன் !!!!!!

காதலுடன் ,
...சுகன்யா...

...நட்பின் காதல்...


மௌனமாகிறேன் ,
கொண்ட காதலை
வெளிபடுத்த முடியாமல் ...

சோர்ந்துபோகிறேன் ,
காதலை சொல்ல
வார்த்தைகளை தேடி
கிடைக்காத களைப்பில் ...

அழுகிறேன் ,
காதல் முகத்தை திரையிட்ட
நட்பின் முகமூடியை கிளிக்கதெரியாமல் ...

சந்தேகிக்கிறேன் ,
முகமூடியை ரசித்த உனக்கு
உண்மை முகம்
பிடிக்காமல் போகுமோ என ...

அச்சபடுகிறேன் ,
துளிர்விட்ட காதல்
கோல் உன்றிய நட்பையும்
சாய்க்குமோ என்று...

நட்பை மீறிய காதலை
நீயும் உணர்ந்தால் - என்னைப்போல்
தனிமையில் கவிதை முனையாதே!
உன் தோள் சாய காத்திருக்கிறேன்
காதலை என்னிடம் காட்டு!!!

காத்திருக்கும் ,
...சுகன்யா...

Wednesday, September 22, 2010

...கைபேசிக்கு நன்றி...

பல கதைகள்
பேசி சலித்த பின்னும்
கணக்கில்லாத
"குட் நைட் "களும்
"பை" களும் சொன்ன பின்னரும்
மனம் விரும்பி ரசிக்கிறது
நடுநிசிவரை தொடருகின்ற
அந்த கை பேசி பேச்சுக்களை!!!

...சுகன்யா...

... உன்னை காணும் நாளுக்காய் ...

உன் கண்மணிகளுக்குள்
என் முகம் காண
தவிக்குதடா என் இருவிழிகள் !!!

...சுகன்யா...

...நிலா காதல்...

நமை ரசிக்க வந்த
நிலவின் கண்களை ,
மேகம் கொண்டு மூடி
நட்சத்திரங்கள் கண்ணாமூச்சி ஆட ,
கோபம் கொண்ட நிலா -
காற்றை கொண்டு
மேகத்தை விரட்டி
மீண்டும் கண்சிமிட்டுகிறான் ...,
நாம் இருவர்
தோள் சாய்ந்து தொடரும்
காதல் தருணங்கள் கண்டு !!!

காதலுடன், 
...சுஜி...

...எல்லாமாக நீ ...

என் நாட்களின்
முதலும் கடைசியுமான
ஞாபகம் - நீ !!!

...suganya...

...முத்தம்...

விழித்திருக்கும் கண்களை
சற்றே மூடிக்கொள் !
உறக்கம் தழுவ அல்ல,
என் இதழ் பதிக்க!!!

...சுகன்யா...

...நண்பனின் பிரிவு...

குறுஞ்செய்தி வரும்போது எல்லாம்
ஆவலுடன் பார்க்கிறேன் ,
நீ அனுப்பி இருப்பாய் என்று !
அனால் நீ இல்லை ...
உனக்கென்ன சேமிக்கப்பட்ட
அழைப்பு மணி
சிணுங்குவதில்லை பல நாட்களாக
நீ அழைக்காமல்!
ஏங்கிபோய் இருக்கிறோம்
நான் மட்டும் அல்ல
என்னுடன் என் கைபேசியும்!!!

...சுகன்யா...

...சுவாசம்...

என் கரம் கோர்த்து
நீ என்னை தழுவும் போது,
உன் நெஞ்சுக்குழியில்
முகம் புதைத்து நிமிர்கிறேன் ,
உச்சி நுகர்ந்த உன்
மூச்சு காற்றின் சுகம்
தரவில்லை இந்த
விலை உயர்ந்த மின்விசிறி!!!

...suji...

Thursday, September 9, 2010

...இப்படிக்கு நான்...

சுழலும் உலகம்
சுமை என நினைத்தாலும் ,
வேதனைகள் -நெஞ்சடைத்து
உயிர் தொட்டாலும்...
சோர்ந்துபோய் நின்றுவிடமாட்டேன் !
ஓர் அணுவாய் இருந்தபோதே,
விந்துக்கள் பல முந்திவர
கருவிலேயே முன்னேறியவள்!
வீழ்ந்த கதை எத்துனை இருந்தாலும் ,
எழுந்த கதை ஒன்று அதிகமாகவே இருக்கும் !!!

வெற்றிகள் காண்பேன்,
...சுகன்யா...

...உன் அழைப்பை எண்ணி...


பொன் கிடைத்தாலும் புதன் கிடைப்பதில்லை 
பொன் கிடைக்காவிட்டாலும் கவலையில்லை 
புதனுக்காக காத்திருக்கிறேன் ,
உன் குரல் கேட்க !
மறவாமல் அழைப்பாயா?காத்திருக்கும்.........., 
...சுகன்யா...

Wednesday, September 8, 2010

...கல் மனது...

கல்லாய் நீ மாறிவிட்டு ,
உளி கொண்டு என்னை அடிக்காதே!
சிற்பமாகவில்லை நான் - சிதறிப்போகிறேன் !

...நாய்குட்டி...

Tuesday, September 7, 2010

...சரஸ்வதி பாட்டி...

விடுதியில் ,
புதிதாய் ஒன்றும் சமைக்கவில்லை .
எப்போதும் போல்
உப்பு , புளி, காரமும் இல்லை .
இருந்தும் கூடுதலாக சாப்பிட்டேன்,
"இன்னும் ஒன்னே ஒன்னு " என்று
நீ சொன்னதால் .
சற்று ருசியும் அதிகமாகவே இருந்தது
அன்போடு நீ தந்ததால் !!!

Saturday, September 4, 2010

...உன் பெயர்...

என் காதலை
கவிதையாய் வடிக்க முயல்கிறேன்
வார்த்தைகள் அனைத்தும்
வரமறுத்து ஒதுங்குகின்றன - உன்
பெயரை கைகாட்டி !
அவைகளுக்கு கூட தெரிந்திருக்கும்
என் காதலுக்கு இணையான வார்த்தை
உன் பெயர் மட்டுமே  என்று !!!

...சுகன்யா...

...கவிதை...

கிறுக்கல்களும் கவிதையாகின்றது
உனக்காக , உன்னை நினைத்து
எழுதும்போது !!!!!!!

...சுகன்யா...

...உடைமைகள்...

மௌனத்திற்கும் கண்ணீருக்கும்
நான் உடைமையானேன்
காதல் என்
உடைமையானதிளிருந்து !

...சுகன்யா...

...என் காதல்...

மறைமுகமாக காதலை வெளிபடுத்தும் நான்
நேர்முகமாக காதலை மறைக்கும் நீ
இடைவெளி அகலப்பட ,
விடை தெரியாத கேள்வியாய்,
ஒலி இல்லாத வார்த்தையாய்,
வார்த்தைகள் அற்ற கவிதையாய்,
மொழி அறியாத பிள்ளையாய் -
ஆனது என் காதல்
சாதித்துவிட்ட மிதப்பில் நீ இருக்க
கொல்லப்பட்ட வலியில் நான் இருக்கிறேன் ...!

...சுகன்யா...

...சஞ்சீவியாக நீ...

நான் கொண்ட காதல்
என்னுள் கரைவதும்
உன்னோடு கலப்பதும்
உன் ஒரு சொல்லில் உள்ளதடா .
என் காதல் நோயாய் மாறி
என்னை கொல்லும் முன்
உன் காதலை மருந்தாய் தந்து
என்னை காப்பாற்று ...............

...சுகன்யா...

Friday, September 3, 2010

...கண்ணாமூச்சி...

வான் பொழியும் மழை நீரிலும்
கண்கள் கசியும் கண்ணீரிலும்
என் காதல் கரைந்திருக்கும் ,

இலை உரசும் தென்றலிலும்
நுரையீரல் தீண்டும் மூச்சிலும்
என் காதல் உறைந்திருக்கும் ,

பறவைகளின் பாடலிலும்
வாய் மொழியும் வார்த்தைகளிலும்
என் காதல் தெரிந்திருக்கும்...

நானாய் , என் உலகமாய்
வாழும் நீ மட்டும்
என் காதலின் கண்களை கட்டி
கண்ணாமூச்சி ஆடுகிறாய் .

விலகி நிற்பவனை கண்ட
உள்ளம் நொறுங்கிபோக ,
போராடி தோற்ற கண்ணீர் துளிக்க
எனை ஆக்கிரமிக்கிறது மௌனம்.
மௌனத்தையும் ஆக்கிரமிக்கிறது காதல் !!!

இங்ஙனம் ,
...சுகன்யா...

Tuesday, August 24, 2010

...மௌன மொழி...

கடலைவிட்டு பிரிந்த போதும்
சமுத்திரத்தின் ஒலி
சங்கினுள் கேட்கும் !
என்னை நீ பிரிந்த போதும்
உந்தன் குரல்
என்றும் 
என்னுள்  ஒலிக்கும் ! 

...suga...

Sunday, August 1, 2010

...கரடிக்குட்டி...

காதலன் என்ற காலன்
அம்பினால் என் இதயத்தை
தெய்தான்.
ஆறாத காயத்தில்
இரத்தம் கசிய ,
தீர்வாய் வந்தவன் நண்பன்.
வேதனையும் சிரிப்பையும்
பகிர்ந்தவன்.
ஆர்ப்பாட்டமில்லாத அன்பு ,
வலியை மறந்த நாட்கள் ,
பாதுகாப்பான உணர்வு - இவை
அனைத்தையும் தந்தவன் .
தந்தையை போல் அறிவுரை பொழிந்து,
அன்னைபோல் அரவணைத்து,
சோதரன் போல் சண்டை இட்டு,
குழந்தை போல் குறும்புகள் செய்து ,
காதலை விட சுகமானது நட்பு - என்று
விளங்கவைத்தவன் , அனால்
கிழிக்கப்பட்ட இதயத்திற்கு மட்டும்
மருந்தை விடுத்து
நஞ்சை தடவி விட்டு போனது ஏனோ ?
"சிவசங்கரன்" ஆனதால் - அழிக்கும்
கடவுளோ நீர் ?
உன்னிடம் கூறியதில்லை
எனக்கு இணையாக
உன்னை நேசிக்கிறேன் என்று .
இப்போது சொல்ல
தவிக்கிறேன்- அனால்
வெகு தொலைவில் நீ .......
உரக்க பேசி அழைக்க நினைக்கையில்
வேதனை தொண்டைகுழியில் சிக்கி
என்னை மௌனமாக்குகிறது .
கண்களில் கண்ணீர் கசிய
நீ சென்ற பாதை நோக்கி நிற்கிறேன்
நட்பால் கரங்கள் கோர்க்க
மீண்டும் வருவாய் என ...................

...நாய்குட்டி...

Sunday, July 4, 2010

...காலை நேரம்...

உறங்கிப்போன சூரியன் ,
லேசாய் விழித்திருந்த நேரம்...
காக்கையும் குருவியும் 
வணக்கம் சொல்லியாச்சு, 
இஸ்லாமிய குழந்தைங்க எல்லாம் 
அரபுப் பள்ளிக்கு போயாச்சு, 
செட்டியார் கடையில 
சக்கரை பருப்புன்னு 
கூச்சல் போட ஆரம்பிச்சாச்சு,
சோம்பேறி நானும் எந்திருச்சு ஆச்சு!
வெப்பம் இல்லாமல் வெளுச்சம் மட்டும் 
தரும் சூரியன்,
மேற்கே இன்னும் மறையாத சந்திரன்,
சிதறி கிடக்கற மேகம் ,
இதழ் உரசும் தென்றல்,
லேசான சாரல்,
இத எதையும் பாக்க குடுத்துவைக்காத நீ ?
இன்னும் உறங்குதியோ ?

...சுகன்யா...  

Wednesday, June 30, 2010

...நட்பு...

"காதலைப் பற்றி
எழுத தெரிந்த உனக்கு
நட்பை பற்றி எழுத மனமில்லையோ?"
என வசைபாடினால் தோழி!
நான் என்செயேன்?
எனக்கும் ஆசைதான்,
நட்பை கருப்பொருளாய்க் கொண்டு
கவிதை முனைய விழைகிறேன்,
ஒரு வார்த்தை கூட
கிடைக்கவில்லை .
பின்பு தான் புரிந்தது ,
வார்த்தைகளில் விவரிக்க
நட்பின் எல்லைகள் சிறிதுஅல்ல!


    நட்புடன்
...சுகன்யா...

Tuesday, June 29, 2010

...இனிய இரவு...


உலகமே கனவில் முழ்கிக் கிடக்க
உறங்காது நானோ விழித்திருக்கிறேன் 
துயில் புணர முடியாமல் அல்ல ,
மனம் இல்லாமல் .
ஆதவனின் உதயத்தை 
பூமி எதிர் நோக்கி இருக்க - என்னுள் 
உதயமான உன் ஞாபகங்களை,
ஸ்பரிசித்து கொண்டுஇருக்கிறேன் நான்...

...சுகன்யா...
  

Thursday, June 24, 2010

...கல்லூரி...

ஏங்கினேன்! ஈன்ற தாய் எனை
ஈரைந்து திங்களே சுமந்தாலென்று.
குறை தீர்த்தாள் என்
கல்லூரித் தாய் - சுமந்தால்
எனை மூன்று வருடம்.
மறவேன் இனி என்றும் இவர்களை !
சுமப்பேன் என் நெஞ்சில்,
சுவாசம் உள்ள வரை என் மூச்சில்.
மறுபிறவி உண்டோ? நான் அறியேன்
இருந்தால் மீண்டும் பிறப்பேன்...
என்னிரு தாய்க்கும் மகளாய்!

    பிரார்த்தனை உடன்,
......சுகன்யாஜெயராம்......

Wednesday, June 23, 2010

...தேடல்...

விழித்திருந்த இரவுகள்
விழியோர கண்ணீர்
தொண்டைகுழியில் சிக்கிய வார்த்தைகள்
மௌனமான உணர்வுகள்
நசுக்கப்பட்ட உணர்சிகள்
சிதறிய எண்ணங்கள்
முகவரி இழந்த காதல்
கிழக்கபட்ட இதயம் - இவை
அனைத்தும் பார்த்தாகிவிட்டது - போதும்.
தேடுகிறேன் ஒரு தோளை
ஆறுதலாய் சாய...
அமைதியில் உறங்க...
உண்மையாய் நேசிக்க...

....சுகன்யா...

...எழுச்சி...

பொய்யான உன் பார்வையையும்,
கள்ளம் கொண்ட உன் சிரிப்பையும்,
உண்மையற்ற உன் வார்த்தைகளையும் கூட
நம்பினேன்!
உன் காதலை வெளிப்படுத்தும் விதம்
பொய்யோ என்று.
எப்போதும் நினைக்கவில்லை - உன்
காதலும் பொய்யென்று.
காதலுக்காக ஏமாந்ததில் வருத்தமில்லை,
காதலை ஏமாற்றியது நீ தான்!
நான் தொலைத்தது உன் கள்ளத்தை
நீ தொலைத்ததோ என் உள்ளதை!
அன்று உன்னால் விழுந்தேன்
அழிவதற்கு நான் இலை அல்ல , விதை!
எழுகிறேன் விருட்சமாக!!!

எழுச்சி கண்ட,
....விதை......