Wednesday, September 22, 2010

...கைபேசிக்கு நன்றி...

பல கதைகள்
பேசி சலித்த பின்னும்
கணக்கில்லாத
"குட் நைட் "களும்
"பை" களும் சொன்ன பின்னரும்
மனம் விரும்பி ரசிக்கிறது
நடுநிசிவரை தொடருகின்ற
அந்த கை பேசி பேச்சுக்களை!!!

...சுகன்யா...

... உன்னை காணும் நாளுக்காய் ...

உன் கண்மணிகளுக்குள்
என் முகம் காண
தவிக்குதடா என் இருவிழிகள் !!!

...சுகன்யா...

...நிலா காதல்...

நமை ரசிக்க வந்த
நிலவின் கண்களை ,
மேகம் கொண்டு மூடி
நட்சத்திரங்கள் கண்ணாமூச்சி ஆட ,
கோபம் கொண்ட நிலா -
காற்றை கொண்டு
மேகத்தை விரட்டி
மீண்டும் கண்சிமிட்டுகிறான் ...,
நாம் இருவர்
தோள் சாய்ந்து தொடரும்
காதல் தருணங்கள் கண்டு !!!

காதலுடன், 
...சுஜி...

...எல்லாமாக நீ ...

என் நாட்களின்
முதலும் கடைசியுமான
ஞாபகம் - நீ !!!

...suganya...

...முத்தம்...

விழித்திருக்கும் கண்களை
சற்றே மூடிக்கொள் !
உறக்கம் தழுவ அல்ல,
என் இதழ் பதிக்க!!!

...சுகன்யா...

...நண்பனின் பிரிவு...

குறுஞ்செய்தி வரும்போது எல்லாம்
ஆவலுடன் பார்க்கிறேன் ,
நீ அனுப்பி இருப்பாய் என்று !
அனால் நீ இல்லை ...
உனக்கென்ன சேமிக்கப்பட்ட
அழைப்பு மணி
சிணுங்குவதில்லை பல நாட்களாக
நீ அழைக்காமல்!
ஏங்கிபோய் இருக்கிறோம்
நான் மட்டும் அல்ல
என்னுடன் என் கைபேசியும்!!!

...சுகன்யா...

...சுவாசம்...

என் கரம் கோர்த்து
நீ என்னை தழுவும் போது,
உன் நெஞ்சுக்குழியில்
முகம் புதைத்து நிமிர்கிறேன் ,
உச்சி நுகர்ந்த உன்
மூச்சு காற்றின் சுகம்
தரவில்லை இந்த
விலை உயர்ந்த மின்விசிறி!!!

...suji...

Thursday, September 9, 2010

...இப்படிக்கு நான்...

சுழலும் உலகம்
சுமை என நினைத்தாலும் ,
வேதனைகள் -நெஞ்சடைத்து
உயிர் தொட்டாலும்...
சோர்ந்துபோய் நின்றுவிடமாட்டேன் !
ஓர் அணுவாய் இருந்தபோதே,
விந்துக்கள் பல முந்திவர
கருவிலேயே முன்னேறியவள்!
வீழ்ந்த கதை எத்துனை இருந்தாலும் ,
எழுந்த கதை ஒன்று அதிகமாகவே இருக்கும் !!!

வெற்றிகள் காண்பேன்,
...சுகன்யா...

...உன் அழைப்பை எண்ணி...


பொன் கிடைத்தாலும் புதன் கிடைப்பதில்லை 
பொன் கிடைக்காவிட்டாலும் கவலையில்லை 
புதனுக்காக காத்திருக்கிறேன் ,
உன் குரல் கேட்க !
மறவாமல் அழைப்பாயா?காத்திருக்கும்.........., 
...சுகன்யா...

Wednesday, September 8, 2010

...கல் மனது...

கல்லாய் நீ மாறிவிட்டு ,
உளி கொண்டு என்னை அடிக்காதே!
சிற்பமாகவில்லை நான் - சிதறிப்போகிறேன் !

...நாய்குட்டி...

Tuesday, September 7, 2010

...சரஸ்வதி பாட்டி...

விடுதியில் ,
புதிதாய் ஒன்றும் சமைக்கவில்லை .
எப்போதும் போல்
உப்பு , புளி, காரமும் இல்லை .
இருந்தும் கூடுதலாக சாப்பிட்டேன்,
"இன்னும் ஒன்னே ஒன்னு " என்று
நீ சொன்னதால் .
சற்று ருசியும் அதிகமாகவே இருந்தது
அன்போடு நீ தந்ததால் !!!

Saturday, September 4, 2010

...உன் பெயர்...

என் காதலை
கவிதையாய் வடிக்க முயல்கிறேன்
வார்த்தைகள் அனைத்தும்
வரமறுத்து ஒதுங்குகின்றன - உன்
பெயரை கைகாட்டி !
அவைகளுக்கு கூட தெரிந்திருக்கும்
என் காதலுக்கு இணையான வார்த்தை
உன் பெயர் மட்டுமே  என்று !!!

...சுகன்யா...

...கவிதை...

கிறுக்கல்களும் கவிதையாகின்றது
உனக்காக , உன்னை நினைத்து
எழுதும்போது !!!!!!!

...சுகன்யா...

...உடைமைகள்...

மௌனத்திற்கும் கண்ணீருக்கும்
நான் உடைமையானேன்
காதல் என்
உடைமையானதிளிருந்து !

...சுகன்யா...

...என் காதல்...

மறைமுகமாக காதலை வெளிபடுத்தும் நான்
நேர்முகமாக காதலை மறைக்கும் நீ
இடைவெளி அகலப்பட ,
விடை தெரியாத கேள்வியாய்,
ஒலி இல்லாத வார்த்தையாய்,
வார்த்தைகள் அற்ற கவிதையாய்,
மொழி அறியாத பிள்ளையாய் -
ஆனது என் காதல்
சாதித்துவிட்ட மிதப்பில் நீ இருக்க
கொல்லப்பட்ட வலியில் நான் இருக்கிறேன் ...!

...சுகன்யா...

...சஞ்சீவியாக நீ...

நான் கொண்ட காதல்
என்னுள் கரைவதும்
உன்னோடு கலப்பதும்
உன் ஒரு சொல்லில் உள்ளதடா .
என் காதல் நோயாய் மாறி
என்னை கொல்லும் முன்
உன் காதலை மருந்தாய் தந்து
என்னை காப்பாற்று ...............

...சுகன்யா...

Friday, September 3, 2010

...கண்ணாமூச்சி...

வான் பொழியும் மழை நீரிலும்
கண்கள் கசியும் கண்ணீரிலும்
என் காதல் கரைந்திருக்கும் ,

இலை உரசும் தென்றலிலும்
நுரையீரல் தீண்டும் மூச்சிலும்
என் காதல் உறைந்திருக்கும் ,

பறவைகளின் பாடலிலும்
வாய் மொழியும் வார்த்தைகளிலும்
என் காதல் தெரிந்திருக்கும்...

நானாய் , என் உலகமாய்
வாழும் நீ மட்டும்
என் காதலின் கண்களை கட்டி
கண்ணாமூச்சி ஆடுகிறாய் .

விலகி நிற்பவனை கண்ட
உள்ளம் நொறுங்கிபோக ,
போராடி தோற்ற கண்ணீர் துளிக்க
எனை ஆக்கிரமிக்கிறது மௌனம்.
மௌனத்தையும் ஆக்கிரமிக்கிறது காதல் !!!

இங்ஙனம் ,
...சுகன்யா...