Saturday, September 4, 2010

...என் காதல்...

மறைமுகமாக காதலை வெளிபடுத்தும் நான்
நேர்முகமாக காதலை மறைக்கும் நீ
இடைவெளி அகலப்பட ,
விடை தெரியாத கேள்வியாய்,
ஒலி இல்லாத வார்த்தையாய்,
வார்த்தைகள் அற்ற கவிதையாய்,
மொழி அறியாத பிள்ளையாய் -
ஆனது என் காதல்
சாதித்துவிட்ட மிதப்பில் நீ இருக்க
கொல்லப்பட்ட வலியில் நான் இருக்கிறேன் ...!

...சுகன்யா...

1 comment:

  1. வார்த்தைகளின் செழுமையும், மொழி ஆளுமையும் கைவரப் பெற்றிருக்கிறாய்!
    நன்று!

    ReplyDelete