Thursday, September 9, 2010

...இப்படிக்கு நான்...

சுழலும் உலகம்
சுமை என நினைத்தாலும் ,
வேதனைகள் -நெஞ்சடைத்து
உயிர் தொட்டாலும்...
சோர்ந்துபோய் நின்றுவிடமாட்டேன் !
ஓர் அணுவாய் இருந்தபோதே,
விந்துக்கள் பல முந்திவர
கருவிலேயே முன்னேறியவள்!
வீழ்ந்த கதை எத்துனை இருந்தாலும் ,
எழுந்த கதை ஒன்று அதிகமாகவே இருக்கும் !!!

வெற்றிகள் காண்பேன்,
...சுகன்யா...

2 comments:

  1. விந்துக்கள் பல முந்திவர
    கருவிலேயே முன்னேறியவள்!

    //

    இது உங்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் ஏற்புடைய தன்னம்பிக்கை வரிகள்... தொடருங்கள்
    ரசிக்க காத்திருக்கும் அன்பன்

    ReplyDelete
  2. தோழியே!
    வெறுமனே நீ உரைதுவிடாய்
    கிறுக்கல்கள் என,
    இவையாவும் செதுக்கல்கள்...
    நீ மருப்பாயென நானறிவேன்...
    கிறுக்கியவை யாவும்
    இணைத்தால் ஓவியமே!
    ஆம்!!!!
    உன் மனம் போல்...

    வாழ்க! வளர்க வானளவு...

    இவன்
    இள. அருண்குமார்

    ReplyDelete