Thursday, September 22, 2011

...பொம்மை...


நான் உண்ணும் பண்டங்களை 
உனக்கும் தருகிறேன் -  
"வேண்டாம் நீ சாப்பிடு" என சிரிக்கிறாய் !
கல்லூரி சென்று திரும்பும்போது 
"தனியே விட்டு எங்கு சென்றாய்" என 
ஏங்கித்தவித்து இருக்கும் உன் முகம் பார்கையில் 
உனை கட்டித்தழுவாமல் அமைதிகொள்வதில்லை ...
உனக்கும் தட்டிக்  கொடுக்கிறேன் 
ஆனால் உறங்காது என்னை ரசிக்கிறாய்... 
என் சந்தோசங்களையும் துக்கங்களையும் 
உன்னிடமே பகிர்ந்துகொள்கிறேன்
தட்டிக்கொடுக்கவும் கண்ணீர் துடைக்கவும் 
சின்ன கைகளாயிற்றே உனக்கு - அதனால் தான் 
மௌனமாய் கேட்கிறாயோ ?
"என்னை என நினைத்துக்கொள் "
என என்னவன் வாங்கித் தந்த "பொம்மை" நீ....
இருந்தும் உனை முத்தமிடும் போது   
லேசாய் பொறாமை கொள்கிறான் ...
பொம்மையாய் பிறர் நினைத்தாலும் 
நான் சொல்லும் கதை கேட்டு 
நீ தலை ஆட்டுவது 
எனக்கு மட்டும் தானே தெரியும்...
என்னவனை நேசிக்கிறேன் ....
பனி நிமித்தம் வேறு இடம் சென்று  
அவன் தந்த தனிமையை மறக்க செய்யும் 
நல்ல நண்பன் நீ ....
அதனால் உன்னையும் நேசிக்கிறேன்.... 
I love you so much creamy......


Friday, July 15, 2011

...எப்போது வருவாய் ?...

உன்னுடன் பயணிப்பதுபோல் ஒரு உணர்வு 
அருகே நீ இருக்கிறாய் என்ற ஆச்சர்யத்தில் 
சற்றென்று விழித்துக்கொண்டது மனம் ...
கனவு என தெரிந்ததும் 
சின்னதாய் ஒரு ஏமாற்றம் ,
புகைப்படங்களில் உன் முகம் தேடி 
ஒரு முறை தொட்டு பார்த்துவிட்டு,
லேசான சிரிப்புடன் 
கட்டி இருந்த தலையணையை 
இன்னும் இருக்கிகொண்டேன்......

மேலும் உறக்கம் கொள்ளமுடியாமல், 
உன்னுடனான ஏதேதோ நினைவுகள் 
மங்கலாய் தோன்றி மறைகின்றன ...
அறைக்கதவை திறந்து பார்கையில், 
மேக மூட்டங்கள் நிறைந்த வானம் 
சில்லென்ற சாரல் காற்று , 
வெள்ளை வெளிச்சத்தில் 
மைனாக்களின் காதல் உணர்த்தியது
நம் தனிமையை.... 

அரைமனதுடன் வேலைகளை முடித்து 
இருவரும் சென்றுவந்த 
கோயிலுக்குச் சென்றேன்.... 
ஜன்னல் வலி மரங்களை 
வெறித்துபார்த்த  படி, 
வழியெங்கிலும் உன் ஞாபகங்கள் .....

சாலையோர மைல் கற்களை பார்த்ததும் 
ஒரு மின்னல் பாய்கிறது மனதுக்குள் ....
அதில் அச்சடிக்கப்பட்ட தூரம் 
உனக்கும் எனக்குமான இடைவெளியின் நீளம் ....

 நாம் அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்தேன்...
அங்குள்ள தூண்கள், அன்று நாம் பேசியதை 
பதிவு செய்து வைத்திருந்தது போலும் 
இன்று எனக்கு மட்டும் ஒளிபரப்பிக் காட்டியது ....

ஒரு நாள் காணாத காதலனுக்காக 
புலம்புகிறாள் உடன்வந்திருந்த  தோழி.... 
நெடுநாள் காணாத உன்னை 
அலைபேசியில் கேட்கிறேன் ,        
"எப்போது வருவாய் ?"
என்றும் சொல்வது போல் சொல்லிவிட்டாய் 
"கண்டிப்பா வரேன் குட்டிமா...." என 
கேள்விக்கான பதிலை மட்டும் .... 

நிகழ்வுகளால் நிரப்பமுடியாத 
டைரி பக்கங்களை 
இன்றும் நினைவுகளால் மட்டுமே 
நிரப்பும்போது 
மெதுவாய் எட்டிப்பார்கிறது 
தனிமையின் கொடுமையும் 
இன்றைய கனவுகளுக்கான எதிர்பார்புகளும்......


...Puppykutty :)

Saturday, May 14, 2011

...பிரிவு...

சமாதானதிர்க்காகவே சண்டைகள் தொடங்குகிறேன்
காதல் வெளிபாடுகளுக்காகவே சீண்டிப்பார்கிறேன் 
கொஞ்சலும் கெஞ்சலும் என
செல்ல கோபமாய் 
முடிந்திருக்கும் இம்முறையும்...

விளையாட்டாய் ஏதோ பேச 
பதிலுக்கு நீயும் கோபத்தில் சீறினாய்... 
வார்த்தைகளை நங்கூரமாய் இறக்கி விட்டு
நீ தான் முதலில் ஆரம்பித்தாய் என்கிறாய்...

கனவுகள் பல கொண்டு
இதய துடிப்பிலே புதுராகம் மீட்டி
உன் எதிர்பார்புகளை
ஏமாற்ற மாட்டேன் என்ற நம்பிக்கையில்
அன்று காதலை சொன்னவன்,
என் நம்பிக்கைகளை தகர்தவனாய்
"என்னை விட்டு போ " என்று
என் துடிப்பை துண்டிக்கிறாய் இன்று....

உதடுகள் பிரிவு மொழி கதைத்தாலும் ,
"போய்விடாதே" என்று உன் மனமும்
"போகவேண்டாம் என சொல் " என
என் மனமும்
மௌனமாய் கதறுகின்றன...

நீ திருடிய என் இதயத்தை
தர மறுத்தவனாய் - உன்னுடையதை
மட்டும் பிடுங்கி கொண்டு,
மீண்டும் என்னிடம் அதை தரவே
ஏங்கி நிற்கிறாய்....
உனை சேரவே நானும் தவிக்கிறேன்...

காதலால் இணைந்தவர்களை ,
இன்றும் இணைத்தே வைத்திருகிறது
இந்த பிரிவும்...

Thursday, March 24, 2011

...உன்னை சரணடைகிறேன்...

கண்ணீர் துடைக்கும் உன் இதழ்கள் 
ஊடுருவும் காதல் பார்வைகள் 
மடிசாய்த்து தலை கோதும் விரல்கள் 
கதை சொல்லி உணவூட்டும் இரவுகள் 
ஆறுதலாய் சாய்த்து கொள்ளும் நெஞ்சம்

பாதுகாப்பான உள்ளங்கை வெப்பம்
குழந்தையை போல் கொஞ்சல்கள்
சிரிப்பதற்காக சின்ன சின்ன பொய்கள் 
முத்தம் வேண்டி சிணுங்கல்கள்
கவர்வதற்காக எழுதும் காதல் கவிதைகள்

கொஞ்சப்படுவதற்காய் காட்டும் செல்ல கோபங்கள்
மன்னிப்பு வேண்டி ஏங்கும் விழிகள்
சமாதானமாய் தரும் முத்தங்கள்
இதமான அணைப்புகள் 
மூச்சு காற்று வெப்பத்தில் தூக்கம்

இன்னும் எத்தனையோ...........

ஒவ்வொரு நிமிடமும் 
கவிதையாய் காதலிக்கும் உன் 
கதை சொல்ல கிறுக்கல்கள் போதாது...
வாழ்நாளின் எண்ணிக்கையும் போதாது...

இத்தனை காதலுக்கும் பதிலாய் 
என்னால் என்ன தந்துவிட முடியும் ,
கடைசி மூச்சு வரை 
என் அருகாமையை தவிர ?

உன்னையே சரணடைகிறேன் 
என் உயிரின் உருவம் நீ என.......!  

Wednesday, March 23, 2011

...ஏக்கம்...

நீ கொஞ்சும் கரடி பொம்மை 
கட்டி உறங்கும் தலையணை
நண்பர்களோடு அளவளாவும் படிகட்டுகள் 
மடிமீது தவழும் பூனைக்குட்டி 
உன் வாசம் கொண்ட சட்டை 
முத்தமிட்ட எதிர்வீட்டு குழந்தை 
மார்போடு உரசும் பேனா
ஆசையாய் வாங்கிய உன் வண்டி
இதயம் வரைந்த வாழ்த்துஅட்டை 
அன்பாய் வளர்த்த ரோஜாச்செடி 
அலுவலகம் கொண்டு செல்லும் பை ....


என நீ ஆசையாய் 
வைத்து இருந்த இத்தனையையும் 
எனக்கு துணையாய் 
விட்டு சென்றாயோ?

பிரிவுக்கு துணையாய் இவை இருந்தாலும் 
எனக்கு துணை நீ மட்டும் தானே ...


உன் நினைவுகளையே 
தரும் இவைகளுக்கு - உன்னைப்போல்
காதலிக்க தெரிந்திருக்கவில்லை...

என் பார்வையின் தவிப்புகளும் 
மனதின் ஏக்கங்களும் 
உன்னை அன்றி யாருக்கு புரியும் ?

உந்தன் நினைவாய்  
இன்னும் எத்தனை இருந்தாலும் 
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்  
உன்னை சேரும் நாளை நோக்கியே.... 

Tuesday, March 22, 2011

நினைவுகள்

சில நேரங்களில் ஒன்றாய் தோன்றும் 
வெயிலும் மழையும் போல் 
நம் பிரிவும் , உன் நினைவுகளும் ...

நம் பிரிவுகள் ..
அனலாய் சுட்டாலும் ,
உன் நினைவுகள் ..
மழையாய் குளிர்விக்கும்...

Lullaby

May the beautiful fairy
sit near my most beautiful baby,
tell him nice stories and
make him sleep sound...

May the cool moon
give my coolest baby
a soft coach to sleep comfort...

May the breeze
blow over my kid and  
make him sleep peacefully...

May the stars
guard my baby from
the noises of night...

I welcome all the naturals
to come in the dream of
my baby and
make him sleep sound...

May my love
give him all warmth and
make him sleep deep...

May his little cute eyes rest
till the morning sun
makes him wake up....

...suji...

Sunday, February 20, 2011

...இமைகளின் நிழலில்...

உன் முனகல்கள் கேட்காமல் 
என் பொழுதுகள் விடியும் ...

நீ தூங்க நான் சொல்லும் 
நரி கதையும், பூனை கதையும் 
உறங்கிப்போய் இருக்கும் ...

காதலை உன்னிடம் சொல்லும்போது 
சலனப்பட்டு சிரிக்கும் நீ -
பலமுறை நான் சொன்னபின்னும் 
அசையாது நின்றிருப்பாய் புகைபடத்தில் ...

நான் ரசிக்கும் உன் சிரிப்பும் 
"சாட்"டில் "ஸ்மைலி"யாய்  மாறி இருக்கும் ...

உன் குரல் கேட்காமல் 
மாய்த்துகொண்டிருக்கும் என் கைபேசி ...

நீ வீடு திரும்பும் நாள் எண்ணி
என் விரல்கள் தேய்ந்து இருக்கும் ...

ஆர்பரிக்கும் உலகம் 
எனக்கு மட்டும் நிசப்தமாய் ,
உன் நினைவுகள் மட்டும் 
எனக்கு துணையாய் ...

கடல் தாண்டி இருக்கும் உன்னிடம் ,
நம் சுவாசம் கலந்த காற்று,
உன்னை தொட்டு செல்லும்போது
காதோடு என் காதல் சொல்லும்...

நம் பிம்மங்கள் காட்டும் வெண்மதியும் 
உன் பார்வைபடும் நேரம் 
என் ஏக்கம் சொல்லும் ...
உணராது விட்டு விடாதே ...
தேயும் நிலவு தேய்ந்தே போகும் !

அருகே நீ இல்லாமல் ,
வெறுமையாகி போன 
பிரமாண்டமான பிரபஞ்சம் ,
தேவையில்லை நான் வாழ .....
உன் கண் இமைகளின் 
நிழலே போதும் -
நிம்மதியாய் உயிர்திருப்பேன் ...... 

Gonna miss u :(

...சுகன்யா...