Friday, July 15, 2011

...எப்போது வருவாய் ?...

உன்னுடன் பயணிப்பதுபோல் ஒரு உணர்வு 
அருகே நீ இருக்கிறாய் என்ற ஆச்சர்யத்தில் 
சற்றென்று விழித்துக்கொண்டது மனம் ...
கனவு என தெரிந்ததும் 
சின்னதாய் ஒரு ஏமாற்றம் ,
புகைப்படங்களில் உன் முகம் தேடி 
ஒரு முறை தொட்டு பார்த்துவிட்டு,
லேசான சிரிப்புடன் 
கட்டி இருந்த தலையணையை 
இன்னும் இருக்கிகொண்டேன்......

மேலும் உறக்கம் கொள்ளமுடியாமல், 
உன்னுடனான ஏதேதோ நினைவுகள் 
மங்கலாய் தோன்றி மறைகின்றன ...
அறைக்கதவை திறந்து பார்கையில், 
மேக மூட்டங்கள் நிறைந்த வானம் 
சில்லென்ற சாரல் காற்று , 
வெள்ளை வெளிச்சத்தில் 
மைனாக்களின் காதல் உணர்த்தியது
நம் தனிமையை.... 

அரைமனதுடன் வேலைகளை முடித்து 
இருவரும் சென்றுவந்த 
கோயிலுக்குச் சென்றேன்.... 
ஜன்னல் வலி மரங்களை 
வெறித்துபார்த்த  படி, 
வழியெங்கிலும் உன் ஞாபகங்கள் .....

சாலையோர மைல் கற்களை பார்த்ததும் 
ஒரு மின்னல் பாய்கிறது மனதுக்குள் ....
அதில் அச்சடிக்கப்பட்ட தூரம் 
உனக்கும் எனக்குமான இடைவெளியின் நீளம் ....

 நாம் அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்தேன்...
அங்குள்ள தூண்கள், அன்று நாம் பேசியதை 
பதிவு செய்து வைத்திருந்தது போலும் 
இன்று எனக்கு மட்டும் ஒளிபரப்பிக் காட்டியது ....

ஒரு நாள் காணாத காதலனுக்காக 
புலம்புகிறாள் உடன்வந்திருந்த  தோழி.... 
நெடுநாள் காணாத உன்னை 
அலைபேசியில் கேட்கிறேன் ,        
"எப்போது வருவாய் ?"
என்றும் சொல்வது போல் சொல்லிவிட்டாய் 
"கண்டிப்பா வரேன் குட்டிமா...." என 
கேள்விக்கான பதிலை மட்டும் .... 

நிகழ்வுகளால் நிரப்பமுடியாத 
டைரி பக்கங்களை 
இன்றும் நினைவுகளால் மட்டுமே 
நிரப்பும்போது 
மெதுவாய் எட்டிப்பார்கிறது 
தனிமையின் கொடுமையும் 
இன்றைய கனவுகளுக்கான எதிர்பார்புகளும்......


...Puppykutty :)

8 comments:

 1. தனிமையை பிரதிபலிக்கும் வரிகளில் தெரிகிறது வலிகள்

  வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 2. காதலின் வலி என்றுமே சுகம் கலந்த வேதனை... hats off to ur love..

  ReplyDelete
 3. மிக்க நன்றி ஹேமா.... Keep reading.... :)

  ReplyDelete
 4. கடைசி வரிகள்
  வார்த்தை பிரவேகம்
  அனைத்தும் அருமை
  எளிமையான
  தனிமையின் வலி
  வாழ்க புப்பிக்குட்டி
  அழகான கவிதை படித்த
  சந்தோசம்
  இப்படிக்கு
  சிவாக்குட்டி

  ReplyDelete
 5. சாலையோர மைல் கற்களை பார்த்ததும்
  ஒரு மின்னல் பாய்கிறது மனதுக்குள் ....
  அதில் அச்சடிக்கப்பட்ட தூரம்
  உனக்கும் எனக்குமான இடைவெளியின் நீளம் ....
  /

  ம் தேடிபிடித்து எழுதி இருகீங்க
  ம் ரசிக்கின்றேன்
  நிறைய எழுதுங்கள்
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 6. Vannakkam Siva,

  Thangal varugaikku nandri...

  Your comments are inspiring me more...

  Keep reading...

  Thank you so much.... :)

  ReplyDelete
 7. am not a PROFESIONALISAM....:).just oru vaasagan avavlvey..

  Y there is no post from you? then

  AM not like you a great poet..

  thanks for comming.

  ReplyDelete